கடலூர் வட்டம் கோண்டூர் ஓம்சக்தி நகரில் உள்ள ஸ்ரீ புத்து நாகவல்லி அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.