கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடிகாடு ஊராட்சியில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், பொதுமக்கள் மகளிர் உரிமை தொகை மற்றும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். அலுவலர்கள் இந்த மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தனர். இந்த முகாம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.