கடலூர் மாவட்டத்தில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தாயுமானவர் திட்டத்தின் கீழ், நாளை (டிசம்பர் 3) மற்றும் 4-ம் தேதி வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இந்த விநியோகத்தில் அடங்கும்.