கொடிக்கால்குப்பம்: துணை மேயரிடம் மனு அளிப்பு

0பார்த்தது
கொடிக்கால்குப்பம்: துணை மேயரிடம் மனு அளிப்பு
கடலூர் மாநகராட்சி 33 வது வார்டுக்குட்பட்ட கொடிக்கால்குப்பம் காலனி பொதுமக்கள், சொக்கலிங்கம் தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வனை சந்தித்து பொது கழிப்பறை அமைக்க கோரிக்கை மனு அளித்தனர். தங்கள் பகுதியில் கழிப்பறை இல்லாததால் பெரும் சிரமம் அடைந்து வருவதாகவும், உடனடியாக கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மனுவை பெற்றுக் கொண்ட துணை மேயர் தாமரைச்செல்வன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது ராமநாதன், திருமா கபிலன், ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.