கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் கோரணப்பட்டு கிராமத்தில் இன்று மனித உரிமைகள் அணியின், RTI சிங்க பெண் விருதுகள் வழங்கும் விழா மனித உரிமைகள் அணியின் தேசிய தலைவர் செல்வ கணேசன் வழிகாட்டுதலின்படி, மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குள்ளஞ்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் உலகநாதன் கலந்து கொண்டார். இதில் சிறப்பாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.