குள்ளஞ்சாவடி அருகே வன்னியர்பாளையம் நடு தெருவைச் சேர்ந்த விவசாயி விஜயகுமார் மகள் ரேஷ்மாவதி (17), கீரப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி முடிந்து பேருந்தில் வீடு திரும்பிய மாணவி, குள்ளஞ்சாவடி அருகே பெரியகாட்டுசாகை நிறுத்தத்தில் இறங்கி சாலையைக் கடக்க முயன்றபோது, கடலூர் நோக்கிச் சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ரேஷ்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.