கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 7ஆவது வார்டு காட்டுக்கொல்லை பகுதியில் நடைபெறும் பள்ளிக்கூட கட்டட பணியை வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் இன்று (ஜூன் 14) காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகராட்சி பொறியாளர் சிவசங்கரன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.