கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணக்குப்பம் பகுதியில், பாகம் எண். 78இல் 100 சதவீதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியினை நிறைவு செய்த வாக்குச் சாவடி நிலை அலுவலர் மற்றும் உதவியாளர்களை, வாக்காளர் பதிவு அலுவலர்/தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்த சிறப்புப் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டதை அடுத்து இந்த பாராட்டு தெரிவிக்கப்பட்டது.