கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம் வான்பாக்கம் வயல்வெளியில் உள்ள அங்காளம்மன் கோயில் அருகே சாத்திப்பட்டு ஜான்பீட்டர் என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அவருடன் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ் இனியன் மற்றும் காவல் துறையினர் உடனிருந்தனர்.