கடலூர் மாவட்டம் பாதிரிக்குப்பம் அருள்மிகு தர்மராஜர் உடனுறை திரௌபதி அம்மன் திருக்கோவிலில் இன்று (20.03.2025) வியாழக்கிழமை மண்டலாபிஷேக பூர்த்தி விழாவை முன்னிட்டு காலை அருள்மிகு தர்மராஜ ஸ்வாமி உடனுறை ஸ்ரீ திரௌபதையம்மனுக்கு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று மகா அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 108 சங்காபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.