கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை வழங்க குவிந்தனர். இதனால், நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை பதிவு செய்யும் நிலை ஏற்பட்டது. இந்த கூட்டம் மாதம் தோறும் திங்கள்கிழமை நடைபெறுவது வழக்கம்.