குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகுப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ரூ. 278.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 10 கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம் மற்றும் கூடுதல் கழிப்பறை ஆகியவை இன்று திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.