செம்மண்டலம்: உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்க அடிக்கல்

1பார்த்தது
செம்மண்டலம்: உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்க அடிக்கல்
கடலூர் மாவட்டம் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்மண்டலம் பகுதியில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் புதிதாக உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கும் பணிக்கு இன்று (12.11.2025) அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம. சிந்தனைச்செல்வன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணைமேயர் பா. தாமரைச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி