கடலூர் அருகே ஆலப்பாக்கத்தில் வசிக்கும் தொழிலாளி விக்னேஷ் (27), மோட்டார் சைக்கிளில் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, செம்மங்குப்பம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.