புதுச்சேரியில் இன்று நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கடலூரில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார். புதுச்சேரி எல்லையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடலூர் பேருந்து நிலையம் அருகே செயல்படும் இரண்டு டாஸ்மாக் கடைகள் இன்று நள்ளிரவு வரையிலும், மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரையிலும் மூடப்பட்டிருக்கும்.