கடலூர் நகர அரங்கில் நடைபெற்ற ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்ட நிகழ்ச்சியில், குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து அவர்களின் தேவைகள் குறித்த பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வெ. கணேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சி, மக்களின் தேவைகளை நேரடியாக அறிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டது.