தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ், முதுநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கூட்டணி குறித்து முடிவினை தலைவர் மட்டுமே எடுப்பார். நட்பு அணிகள் இணைந்தாலும், இணையாவிட்டாலும் தமிழக வெற்றி கழகம் தனித்து ஆட்சி அமைப்பதற்கான ஆற்றலை பெற்றுள்ளது' என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.