கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவிலில் 99-ஆம் ஆண்டு செடல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவைத் தொடர்ந்து திருத்தேரில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. மேலும், இரவு சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.