கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த திருவந்திபுரம் கிராமத்தில் உள்ள தேவநாத சுவாமி கோயிலில் வஸந்த உத்ஸவத்தின் 10 ஆவது நாளை முன்னிட்டு, நேற்று மாலை புறப்பாடு மற்றும் ஆஸ்தானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.