கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவந்திபுரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோயிலில், தை மாத முகூர்த்த நாளான நேற்று ஒரே நாளில் 85 திருமணங்கள் நடைபெற்றன. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் திருமணம் நடந்தால் குடும்பம் சிறப்பாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இதனால் இங்கு திருமணங்கள் நடப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.