திருவதிகை: ஆட்டோ மோதி மூதாட்டி உயிரிழப்பு

416பார்த்தது
திருவதிகை: ஆட்டோ மோதி மூதாட்டி உயிரிழப்பு
பண்ருட்டி அடுத்த திருவதிகை குட்டை தெருவில் வசிக்கும் 65 வயது கன்னியம்மா, சிவராத்திரி சுவாமி வருகையையொட்டி வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது, கடலூர் நோக்கிச் சென்ற ஆட்டோ மோதி தலையில் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று கன்னியம்மா உயிரிழந்தார். இது குறித்து பண்ருட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி