தூக்கணாம்பாக்கம்: கொள்ளையடிக்க சதி திட்டம் - 3 பேர் கைது

0பார்த்தது
தூக்கணாம்பாக்கம்: கொள்ளையடிக்க சதி திட்டம் - 3 பேர் கைது
தூக்கணாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பெரியபாளையத்தம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற மூவரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பவித்ரன் (24), அய்யப்பன் (21), பவுல்ராஜ் (25) ஆகியோர் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.