கடலூர்: குளத்தில் முழ்கி இளைஞர் பலி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வடக்கு பெரியாா் நகரை சோ்ந்த சக்திவேல் மகன் விவேகானந்தன் பட்டதாரி இவர் நண்பா்கள் இருவருடன் விருத்தாச்சலம் பாலக்கரை பகுதியில் உள்ள தெப்பக்குளத்தில் நீச்சல் பழகச் சென்றார் அப்போது, அவா் குளத்தில் மூழ்கி மாயமானார். இதுகுறித்து சக நண்பா்கள் விருத்தாசலம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் நீண்டநேரம் தேடி விவேகானந்தனை சடலமாக மீட்டனர். இது குறித்து விருத்தாசலம் காவல் துறையினர் விவேகானந்தனின் சடலத்தை உடல் கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.