
குமராட்சி: மணல் கடத்திய வாலிபர் கைது
குமராட்சி அருகே தில்லை நாயகபுரம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தப்பட்டதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த பிரதீப்குமார் (24) என்பவர் 3 மணல் மூட்டைகளுடன் மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தபோது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து மணல் மூட்டைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.






































