கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முகையூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மதுபாட்டில் விற்றதாக தெம்மூர் கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்த மணிமாறன், பரிவிளாகம் கிராமம் கென்னடி தெருவை சேர்ந்த நாகப்பன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.