மத்திய பா. ஜனதா அரசு அமல்படுத்தி உள்ள தொழிலாளர் விரோத 4 சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், விதை மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மொத்தம் 961 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.