சிதம்பரம்: புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

0பார்த்தது
சிதம்பரம்: புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவானந்தம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிதம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த தாக, சிதம்பரம் எடத் தெருவை சேர்ந்த செல்வம் (வயது 50) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் 4 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி