கடலூர்: ஜூன் 2, 3 தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள்

783பார்த்தது
கடலூர்: ஜூன் 2, 3 தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள்
தமிழ்நாடு அரசு, வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் தாயுமானவர் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன்படி, கடலூர் மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வருகிற 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி