தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கடலூர் உட்பட 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.