கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நேற்று தொடங்கியது. பிப்ரவரி 9 முதல் 14 வரை நடைபெற உள்ள இந்தத் தேர்வை 196 மையங்களில் 30,550 மாணவர்கள் எழுதினர். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.