கடலூர்: அமைச்சர் எம்ஆர்கே தலைமையில் ஆய்வு கூட்டம்

66பார்த்தது
கடலூர்: அமைச்சர் எம்ஆர்கே தலைமையில் ஆய்வு கூட்டம்
தலைமைச் செயலகத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் முதலமைச்சர் 11.06.2025 அன்று துவக்கப்பட்டு இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வ. தட்சிணாமூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநர் பி. முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பி. குமாரவேல் பாண்டியன், சர்க்கரைத் துறை இயக்குநர் த. அன்பழகன், தலைமை பொறியாளர் (வே. பொ) ஆர். முருகேசன், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி