காட்டுமன்னார்கோயில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நல்லதம்பி, தலைமை காவலர் தீபன் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசன், ஓட்டுநர் சின்ராஜ் ஆகியோர் தொடர்மழை பெய்து கொண்டிருந்த இரவில், பேருந்து நிறுத்தத்தில் இரண்டு குழந்தைகளுடன் பேருந்து வசதியின்றி தவித்த பெண்ணுக்கு உதவி செய்தனர். ஆட்டோவில் செல்ல பணம் இல்லாததால் தவித்த அவர்களுக்கு, காவலர்கள் ரூபாய் 300 கொடுத்து ஆட்டோ ஓட்டுநரிடம் ஒப்படைத்தனர். ஆனால் ஆட்டோ ஓட்டுநர் ரூபாய் 400 கேட்டதால், அருகில் இருந்த பூக்கடைக்காரர் ரூபாய் 100 கொடுத்து அந்தப் பெண்ணையும் குழந்தைகளையும் பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்தார். காவலர்களின் கருணை உள்ளத்தை பாராட்டி அவர்கள் நன்றி கூறி சென்றனர்.