கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் வெங்கடேசன் (46) குடும்பப் பிரச்சனை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காட்டுமன்னார்கோவில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.