காட்டுமன்னார்கோவில் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட குமார் என்பவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே பல மணல் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது தொடர் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கலெக்டரின் உத்தரவின் பேரில் குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, அதற்கான நகல் வழங்கப்பட்டுள்ளது.