லால்பேட்டை: வீராணம் ஏரியில் மீன் குஞ்சுகள் விடுதல்

51பார்த்தது
லால்பேட்டை: வீராணம் ஏரியில் மீன் குஞ்சுகள் விடுதல்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை வீராணம் ஏரியில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தின் படி வீராணம் ஏரியில் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையிலும் மீன் உற்பத்தியை அதிகரித்திடவும் முதற்கட்டமாக 4 லட்சம் ரோகு இன மீன்குஞ்சுகள் விடப்பட்டன.
நிகழ்வில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் எம்எல்ஏ, கடலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் வேல் முருகன், உதவி இயக்குனர் ரம்யாலட்சுமி, ஆய்வாளர் சதுருதீன், மற்றும் மீனவர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி