ஓமாம்புலியூரில் இன்று மாசி மக திருவிழா

4பார்த்தது
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஓமாம்புலியூரில் இன்று மாசி மகம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தனர். இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்விற்கு காட்டுமன்னார்கோயில் காவல் நிலைய காவல் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். மேலும், மருத்துவக் குழுவினரும் உடனிருந்து சிறப்பான சேவையாற்றினர். இதன் மூலம் ஓமாம்புலியூரில் மாசி மகம் விழா அமைதியாகவும், கோலாகலமாகவும் நிறைவடைந்தது.

தொடர்புடைய செய்தி