கடலூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்துள்ளது. இன்று (பிப். 5) காலை 8:30 மணி நிலவரப்படி, சிதம்பரம் பகுதியில் 4 மில்லி மீட்டர் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதியில் 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளில் மழை பதிவாகவில்லை.