உடையார்குடி: நாளை இலவச மருத்துவ முகாம்

3பார்த்தது
உடையார்குடி: நாளை இலவச மருத்துவ முகாம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உடையார்குடி பகுதியில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் நாளை (ஜூன் 3) காலை 9 மணி முதல் மதியம் 1:30 மணி வரை இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு, காட்டுமன்னார்கோயில் திமுக ஒன்றிய நகர இளைஞரணி மற்றும் பாண்டிச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் இணைந்து இந்த முகாமை நடத்துகின்றன.