கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

874பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த அதிக வெயிலின் தாக்கம், இரண்டு நாட்களாக வறண்ட வானிலைக்குப் பிறகு இன்று (மே 15) பெய்த பரவலான மழையால் தணிந்துள்ளது. கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் பெய்த மழையால் அப்பகுதியில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும், பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.