
குறிஞ்சிப்பாடி: லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
கடலூர் - விருத்தாசலம் சாலையில், குறிஞ்சிப்பாடி அருகே தம்பிப்பேட்டை கிராமத்தில் கூலி வேலைக்குச் சென்ற நெய்வேலியைச் சேர்ந்த சிவக்குமார் (54) என்பவர், வேலை முடிந்து பெட்ரோல் பங்க் அருகே படுத்திருந்தபோது, பின்னோக்கி வந்த லாரி மோதி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





































