கடலூர்: அமைச்சர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

81பார்த்தது
கடலூர்: அமைச்சர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில், தென்னை வளர்ச்சிக்கான திட்டங்கள், கரும்புக்கான ஊக்கத்தொகை, டெல்டா பகுதிகளில் சேமிப்பு கிடங்குகள், நெல் உலர்த்தும் இயந்திரங்கள் வழங்குதல், மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டு திட்டம், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பொருளீட்டு கடன், ஆதிதிராவிடர் பழங்குடியினர் விவசாயிகளுக்கு கூடுதல் மானியம், முதலமைச்சரின் ஆயிரம் உழவர் சேவை மையங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.