கடலூர்: காணாமல் போன சிறுவன் பத்திரமாக ஒப்படைப்பு

78பார்த்தது
கடலூர்: காணாமல் போன சிறுவன் பத்திரமாக ஒப்படைப்பு
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி உதவி ஆய்வாளர் கனகராஜ் மற்றும் போலீசார் 3.6.2025 தேதி இரவு குள்ளஞ்சாவடி முருகன் கோயில் அருகில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தபோது சிறிய சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்த சுமார் 8 வயது மதிக்கத்தக்க சிறுவனை விசாரித்ததில் வழி தெரியாமல் சைக்கிள் ஓட்டி வந்ததாகவும், தனது பெயர் நகுலேஷ் வயது 8, அப்பா பெயர் நீலகண்டன், பெரியகண்ணாடி எனவும், குறிஞ்சிப்பாடி ஜெயின்பால் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருவதாகவும், 3.6.2025 தேதி மாலை அவரது வீட்டில் இருந்து சுமார் 12 கி.மீ தூரம் சைக்கிள் ஓட்டி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. 

குள்ளஞ்சாவடி தனிப்பிரிவு காவலர் அருண்குமார், காவலர் கருணாகரன் ஆகிய இருவரும் சிறுவனை பெரியகண்ணாடி கிராமத்துக்கு அழைத்துச் சென்று அவரது தாத்தா பாட்டியிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். அந்த நேரத்தில் சிறுவனை காணாமல் கிராமத்தினர் அனைவரும் காணாமல் போன சிறுவனை பற்றி ஒருவருக்கொருவர் விசாரணை மேற்கொண்டு தேடும்பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிறுவனை கண்டவுடன் காவல்துறைக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள்.

தொடர்புடைய செய்தி