கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று வறண்ட வானிலை நிலவியது. இன்று (மே 24) மீண்டும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. கடலூர் பகுதியில் 100.76 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதியில் 100.40 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.