காட்டுக்கொல்லை: சாலை அமைக்க ஆய்வு

0பார்த்தது
காட்டுக்கொல்லை: சாலை அமைக்க ஆய்வு
வழுதூர் நகராட்சி காட்டுக்கொல்லை வடக்கு தெரு பகுதியில் சாலை அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, சாலை அமைப்பதற்கான இடத்தை நகர்மன்ற தலைவர் சிவக்குமார் ஆய்வு செய்தார். மேலும், சாலை அமைக்கும் பணியில் இடையூறாக உள்ள மின் கம்பத்தை இடம் மாற்றி அமைக்க மின்வாரிய ஊழியர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி