கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே எல்லப்பன்பேட்டை கிராமத்தில், குடிபோதையில் இருந்த சிவபாரத் என்பவர் பணம் கேட்டு தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டி, இரும்பு கத்தியால் வெட்ட முயன்றார். இதைத் தடுக்க முயன்ற அவரது தாய் சின்னபாப்பா (65) தலையில் வெட்டுக்காயம் அடைந்தார். அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவபாரத் அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்து செல்வகணபதி அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.