குறிஞ்சிப்பாடி: பாமகவினர் 12 பேர் மீது வழக்கு பதிவு

55பார்த்தது
குறிஞ்சிப்பாடி: பாமகவினர் 12 பேர் மீது வழக்கு பதிவு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை மறித்ததாக அக்கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், மாநில அமைப்பாளர் தர்மலிங்கம் உள்ளிட்ட 12 நிர்வாகிகள் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.