கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இன்று (மே 28) அமலாக்கத் துறையை கண்டித்து சிபிஎம் கட்சி சார்பில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கேரள முன்னாள் முதல்வர் பினராய் விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதையும், டெல்லியில் நடந்த போராட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் எம். ஏ. பேபி உள்ளிட்ட தலைவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததையும் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.