கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே, ஊருக்குள் புகுந்த முதலையை வேடிக்கை பார்க்க சென்ற இருவர் அதன் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து முதலையை பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், வனத்துறையினர் அந்த முதலையை வக்ரஹர ஏரியில் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.