குறிஞ்சிப்பாடி அருகே விருப்பாட்சி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த தொழிலாளி வெங்கடேசன் (48), நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட
வேலை செய்யும்போது தலையில் அடிபட்டதால் அடிக்கடி தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், மீண்டும் தலைவலி ஏற்பட்டதால் வீட்டில் இருந்த விஷத்தை மதுவில் கலந்து குடித்துவிட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.