கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள், எஸ்எம்சி உறுப்பினர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறித்து விவாதித்தனர். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.